மோடியை விமர்சிக்காத எடப்பாடி.!அதிமுகவிற்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்- திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தல்  வழக்கமான தேர்தல் அல்ல என தெரிவித்த திருமாவளவன், சங் பரிவார் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர் என கூறினார்.

Thirumavalavan said that voting for AIADMK is equal to voting for BJP KAK

நாடகம் ஆடும்- அதிமுக, பாஜக

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரச்சாரம்  விறுவிறுப்படைந்துள்ளது. இந்தநிலையில்  அரியலூரில் பிரச்சாரம் செய்த திருமாவளவன், தற்போது நாடாளுமன்ற தேர்தல்  வழக்கமான தேர்தல் அல்ல என தெரிவித்த அவர்,

சங் பரிவார் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான போர் என கூறினார். இந்த தேர்தலில் மக்களை ஏமாற்ற அதிமுக அணி வேறு பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களே தெரியும். அதிமுகவும் பாஜகவும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர் என விமர்சித்தார். 

Thirumavalavan said that voting for AIADMK is equal to voting for BJP KAK

பாஜகவை விமர்சிக்காத அதிமுக

பாஜக அரசு மக்கள்‌ விரோத சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.  இன்றைய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சியாக உள்ளது. அப்பட்டப்பட்ட பாஜகவுடன் இணைந்துள்ளனர் பாமக.  சமூக நீதியை பாதுகாக்கவே திமுக-காங்கிரஸ் -கம்யூனிஸ்ட்- விசிக-வுடனான கூட்டணியை நெருக்கடிகள்‌ வந்தாலும் தொடர்ந்து வருகிறார்கள் .நாடாளுமன்றத் தேர்தலில் கூட அதிமுகவினர் பாஜகவை விமர்ச்சிக்க மாட்டார்கள்.  திமுகவினரைத் தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜக வை விமர்ச்சிக்காதவர்கள் அதிமுக என்பதை மக்கள்‌ உணர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios