Asianet News TamilAsianet News Tamil

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் திருமாவளவன்.. ஆனால்.. மருத்துவர் சொன்ன அட்வைஸ்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடந்த 25ம் தேதி இரவு காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

Thirumavalavan returned home from the hospital tvk
Author
First Published Oct 3, 2023, 4:02 PM IST

சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று திருமாவளவன் வீடு திரும்பினார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடந்த 25ம் தேதி இரவு காய்ச்சல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆகையால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் தலைமை கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- இப்போ வெட்ட வெளிச்சம் ஆச்சு.. பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் இதை செய்யணும்.. திமிரும் திருமா.!

Thirumavalavan returned home from the hospital tvk

இதனிடையே அவரது உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். 

இதையும் படிங்க;-  விசிகவை நெருங்கும் அதிமுக? ஹலோ அண்ணே.. திருமாவுக்கு போன் போட்டு பாசத்தோடு நலம் விசாரித்த இபிஎஸ்..!

இந்நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று வீடு திம்ரும்பினார். இருப்பினும் மருத்துவர்கள், திருமாவளவனை ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios