Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு எதிராகவா ரஜினி பேசுவார்..? இதிலென்ன ஆச்சரியம் இருக்கு..? திருமாவளவன் நறுக்!

காங்கிரஸ் கட்சி தற்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. இதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது

Thirumavalavan on Rajini speech about modi and amith sha
Author
Tuticorin, First Published Aug 11, 2019, 9:23 PM IST

மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவை உவமையாக  நடிகர் ரஜினிகாந்த் சொன்னதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதும் இல்லை என்று விசிக  தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். Thirumavalavan on Rajini speech about modi and amith sha
 நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்த விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  “காஷ்மீர் மக்களுக்கு நரேந்திர மோடி அரசு வரலாற்று துரோகத்தை செய்திருக்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கை கண்டித்திருக்கின்றன. நாடாளுமன்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு ஜம்மு காஷ்மீருக்கு செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் கூடி முடிவு செய்வோம்.Thirumavalavan on Rajini speech about modi and amith sha
காங்கிரஸ் கட்சி தற்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டிருப்பது சரியான முடிவு. இதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது. வேலூர் தொகுதியில் வெற்றி பெற அதிமுக அனைத்து பராக்கிரமங்களையும் செய்தது. இது அனைத்தையும் தாண்டி திமுக வெற்றி பெற்றுள்ளது. Thirumavalavan on Rajini speech about modi and amith sha
மோடியையும் அமித்ஷாவையும் கிருஷ்ணர், அர்ஜூனன் என ரஜினி தெரிவித்திருக்கிறார். ரஜினியிடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் வரும் என எதிர்பார்க்க முடியாது. அவர் மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை கூறுவார். எனவே, மகாபாரதத்திலிருந்து மோடி - அமித் ஷாவை உவமையாக சொன்னதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இது அதிர்ச்சி அளிக்கக்கூடியதும் இல்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios