Thirumavalavan is already acting in films and as an actor he said the Union Minister Ponnathirakrishnan said.
திருமாவளவனும் ஏற்கனவே படங்களில் நடித்தவர் தான் எனவும் நடிகர் என்ற முறையில் அவரையும் வளைப்போம் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது.
இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவனும் ஏற்கனவே படங்களில் நடித்தவர் தான் எனவும் நடிகர் என்ற முறையில் அவரையும் வளைப்போம் எனவும் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜனதா கட்சி நடிகர்களை வளைத்து போட முயற்சிப்பதாக கூறுவது சரியல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மெர்சல் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி விளம்பர தூதர்களை போல் செயல்படவில்லை எனவும் மெர்சல் படத்தை எச்.ராஜா இணையதளத்தில் பார்த்து விமர்சித்ததாக கூறுவது தவறு எனவும் தெரிவித்தார்.
