25ஆண்டுகளாக சிறையில் இஸ்லாமிய கைதிகள்..! விடுதலை செய்ய அனுமதி கொடுக்காமல் தாமதிக்கும் ஆளுநர் - திருமாவளவன்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Thirumavalavan demands release of Muslim prisoners who have been in jail for 25 years

25 ஆண்டுகளாக சிறையில் இஸ்லாமியர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் 25 ஆண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்,  பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகள் 25 வருடங்களை கடந்தும் சிறையில் உள்ளதாக தெரிவித்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சையின்றி இறந்துள்ளாதவும் தெரிவித்தார். இந்தநிலையில்  திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகள் விடுவிக்க முடிவு செய்யப்பட்டு அதில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,  

Thirumavalavan demands release of Muslim prisoners who have been in jail for 25 years

தாமதிக்கும் ஆளுநர் மாளிகை

விரைவில் மேலும் சிலர் விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 37 இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.இஸ்லாமியர்களை விடுவிக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், 700 பேரை விடுவிக்கலாம் என அரசாணை பிறப்பித்தும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லையென தெரிவித்தார். இந்த தாமதத்திற்கு தமிழக அரசு காரணமல்ல என கூறியவர் ஆளுநர் மாளிகை தான் அனுமதி கொடுக்காமல் தாமதிப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

ஆர்என் ரவியை தமிழக தேர்தலில் போட்டியிட அழைக்கும் திமுக... பீகாரில் போட்டியிட ஸ்டாலின் தயாரா.? அண்ணாமலை கேள்வி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios