thirumavalavan criticize high court verdict on eleven mla case

நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் அரசியல் சூழலுக்கு ஏற்பவே தீர்ப்புகள் வழங்கப்படுவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, சபாநாயகரின் அதிகார வரம்பில் தலையிட முடியாது எனக்கூறி, 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திருமாவளவன், நீதித்துறையில் அரசியல் தலையீடு உள்ளதையே இந்த தீர்ப்பு காட்டுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல், அரசியல் சூழலுக்கு ஏற்பவே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீதித்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. அரசியல் தலையீடு உள்ளது. பதவி உயர்வை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கடுப்படுகிறதோ என்றுகூட எண்ண தோன்றுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.