நிர்மலா சீதாராமன் பிரதமரின் ஒப்புதலோடு பேசுகிறாரா.? அல்லது தான்தோன்றித்தனமாக பேசுகிறாரா.?- திருமாவளவன் ஆவேசம்

வெள்ள பாதிப்பிற்கு நிவாரணத்தொகை 21,000 கோடி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். ஆனால் மத்திய அரசு வழக்கம் போல் 900 கோடியை மட்டுமே  இரண்டு தவனைகளாக வழங்கி உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார். 

Thirumavalavan condemns the central government for not declaring the South District flood as a national calamity KAK

 வரலாறு காணாத மழை

திருநெல்வேலி வெள்ளகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு இன்று நிவாரண நிதி வழங்கினோம். நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் 4ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்க இருப்பதாக தெரிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே நாளில் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.  

Thirumavalavan condemns the central government for not declaring the South District flood as a national calamity KAK

தான் தோன்றித்தனமாக பேசுவதா.?

மேலும் நிவாரணத்தொகை 21,000 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் மத்திய அரசு வழக்கம் போல் 900 கோடியை மட்டும் இரண்டு தவனைகளாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிர்மலா சீதாராமன் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார், பிரதமரிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது ஏற்புடையது அல்ல.  பிரதமரின் ஒப்புதலோடு பேசுகிறாரா? அல்லது தான்தோன்றித்தனமாக நிர்மலா சீதாராமன் பேசுகிறாரா அல்லது கொள்கை முடிவுகளாக இதை பேசுகிறார்களா என கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணத்தை வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தியும்,

Thirumavalavan condemns the central government for not declaring the South District flood as a national calamity KAK

விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறைப்படுத்த வேண்டும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படை தன்மை இல்லை.  எனவே பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

எண்ணூர் அமோனியம் வாயு கசிவிற்கு காரணம் என்ன .? தற்போது வாயு கசிவு நிலை என்ன.? கோரமண்டல் நிறுவனம் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios