முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்தபிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

இயதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பு பறக்றது.

நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆளுனரை சந்தித்து தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும் அதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து சென்று ஆளுநரை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பன்னீர்செல்வத்தை தான் மிரட்டவில்லை என கூறி எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் கொடுத்தார்.

இந்நிலையில் சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஒருவரையொருவர் போட்டி போட்டுகொண்டு களத்தில் குதித்துள்ளனர்.

ஒருபுறம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே விடாமல் சசிகலா சிறைபிடித்து காத்து வருகிறார்.

மறுபுறம் எம்.எல்.ஏக்களை மீட்டெடுக்க பன்னீர்செல்வம் பல அதிரடி நடவடிக்கைகளால் போராடி வருகிறார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,

தமிழகத்திற்கு என தனி ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை தேவைப்படுகிறது.

முடிவெடுக்க காலதாமதம் செய்வது குதிரை பேரங்களுக்கு வித்திட்டுவிடும்.

பேரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிலை ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார்.