thevar guru pooja 8000 police in action

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பல லட்சனக்கணக்கானோர் இந்த விழாவிற்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவர் குருபூஜையின்போது இரு பிரிவினரிடையே மோதல் நடந்துவருவது வழக்கமாக இருந்தது.

இதைத்தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. வாடகை வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். தேவர் குரு பூஜைக்காக பசும்பொன்னில் 4 ஐஜி.,க்கள் தலைமையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.