அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என விதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாகவும், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக விதிகளில் மாற்றமா?
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்கிற பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனையடுத்து பெரும்பாலான பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என விதிகள் கொண்டுரவப்பட்டது, இந்த விதியில் பிரிவு 1ல் கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச்செயலாளர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 2 ல் பொதுச்செயலாளர் தமிழ்நாட்டில் உள்ள கழகக்கிளைகளின் அடிப்படை உறுப்பினர்களாலும், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அடங்கிய கிளைக்கழகங்களின் உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் படையெடுப்போம்
மேலும் விதி 43ல் கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக பொதுச்செயலாளரை கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ உரியதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த அதிமுக சட்ட விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. அதில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சட்ட விதிகளுக்கு மாறாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மேலும் எங்களது உரிமையை பறிக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் படையெடுப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
