தி.மு.கவில் சேர அந்த கட்சியின் கதவுகளை தான் தட்டுவதில் என்ன தவறு என்று அழகிரி கேட்டுள்ளது கிட்டத்தட்ட அவரும் கெஞ்சும் நிலையில் இருப்பதை காட்டுவதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். கலைஞர் மறைவுக்கு பிறகு மு.க.அழகிரி தொடர்புடைய யாருக்கும் தி.மு.கவில் மீண்டும் இடம் இல்லை என்று திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின். 

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மூலமாக நடைபெற்ற எந்த பேச்சுவார்த்தையின் முடிவும் அழகிரிக்கு சாதகமாக இல்லை. இதனால் கலைஞர் நினைவிடம் சென்று கலகத்தை ஆரம்பித்தார் அழகிரி.

 ஆனால் அழகிரிக்கு தி.மு.கவினர் மத்தியில் துளியளவும் ஆதரவு இல்லை. இதனால் மதுரை சென்று ஆதரவாளர்களை திரட்டும் பணியில் அழகிரி ஈடுபட்டுள்ளார். முதல் நாள் மதுரை ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 
மொத்தமாக 300 பேர் கூட வராத நிலையில் ஏராளமான காலி சேர்கள் அழகிரியின் தற்போதைய செல்வாக்கை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து விருதுநகர், தேனி சுற்றுவட்டார மாவட்ட ஆதரவாளக்ரளை அழகிரி 2வது நாளாக சந்தித்தார். அப்போதும் கூட அழகிரி எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. இதனால் அப்ஷெட்டான அழகிரி, செய்தியாளர்களை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். 

அப்போது வழக்கமான தனது அதிரடி பதில்களை விட்டுவிட்டு நிதானமாக பதில் அளித்தார்.

ஒரு கட்டத்தில் மூடிய தி.மு.கவின் கதவை ஏன் தட்டுகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அழகிரி கோபப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரியோ அண்ணா, கலைஞர் வளர்த்த தி.மு.கவில் சேர கதவை தட்டுவது ஒன்றும் தவறில்லை என்று கூறிவிட்டு சென்றார். 

இதுநாள் வரை ஸ்டாலினை தலைவராக விடமாட்டேன், பொதுக்குழு நடைபெறாது என்றெல்லாம் கூறி வந்த அழகிரி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அதாவது திமுக தலைவர் கலைஞர் இருந்தபோதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான் இப்போதா ஆசைப்பட போகிறேன்? என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தான் எதிர்பார்த்த அளவிற்கு தனக்கு ஆதரவாளர்கள் கூட்டம் இல்லை என்கிற உண்மையை அழகிரி தெரிந்து கொண்டது தான் காரணம் என்கிறார்கள்.

அதே சமயம் மதுரையில் அழகிரி பேசியதை பார்த்த போதுதன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் படி அவர் கெஞ்சுவது போல் தான் தெரிகிறது என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் நக்கலடித்து வருகின்றனர். என்னதான் செய்தியாளர் சந்திப்பில் அப்படி பேசினாலும், ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 5 சென்னை பேரணிக்கு ஆள் திரட்டும் பணியை அழகிரி முழு மூச்சாக மேற்கொண்டே வருகிறார்.