உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் மக்கள் போராடி வருகின்றனர்; பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோயம்பேடு சந்தை விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று அதிகரித்தது; தமிழகத்தில் 95% தொற்று மாநிலத்திற்கு உள்ளேயே ஏற்பட்டுள்ளது.

1. சமூக பரவலே இல்லை என்பது உண்மை என்றால் தொற்று அதிகரிக்க காரணம் என்ன? 
2. கொரோனாவை அறவே ஒழிப்போம் என்ற பொய் பேட்டிகளை தருவதை விட்டு, செயல்திட்டம் எப்போது அமைப்பீர்கள்?
3. மக்களை எத்தனை நாளைக்கு ஏமாற்றப் போகிறீர்கள்?
4. முக்கிய எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்க தொடர்ந்து மறுத்து வருவதன் காரணம் என்ன?
5. வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அரசு ஆர்வம் காட்டுவது எப்போது?
5 கேள்விகளை மக்கள் சார்பாக நான் கேட்டுள்ளேன்

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மறைக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது; இறப்பின் எண்ணிக்கையை மறைப்பதில் தமிழக அரசிடம் உள்நோக்கம் உள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும், நோயை கட்டுப்படுத்த தவறுவது ஏன்?; பெண்களின் கோரிக்கையை ஏற்காமல் டாஸ்மாக் கடைகளை திறந்தது தமிழக அரசு. கொரோனாவை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் முதல்வர் இருக்கிறார் ’’ என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.