சசிகலாவோ, டிடிவி தினகரனோ மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் எப்போழுதும் தமிழக அரசுக்கோ, உயர்கல்விதுறைக்கோ தொடர்பில்லை. ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு என்பது அரசியல் இல்லை என்றும் இது வழக்கமான சந்திப்புதான். ஆளுநர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர். அந்த அடிப்படையில் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பதாக தகவல் ஏதும் இல்லை. இதுவரை அதுபோன்ற சந்திப்பு இருப்பதாக தெரியவில்லை. 

தினகரன் தரப்பில், ஓபிஎஸ் சந்தித்தார் என்றதற்கான விளக்கத்தை ஓ.பன்னீர்செல்வம்கொடுத்துள்ளார். அந்த விளக்கமே போதுமானது. ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு எடுத்த முடிவு. தொண்டர்களின் ஏகோபித்த முடிவு. சசிகலா குடும்பத்தை சார்ந்தவர்கள், யாருடைய தலையீடும் இன்றி முழுமையாக அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கத்தையும், அரசையும் வழி நடத்த வேண்டாம் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு. தினகரனோ, சசிகலாவோ மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு. தமிழகமக்களின் எதிர்பார்ப்பு. அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம். டிடிவி தினகரனை யாரும் அழைக்கவில்லை. டிடிவி தினகரன் கூறுவது வடிவேல் காமெடி போல் உள்ளது. எந்த யுத்தியை கையாண்டாலும் அதிக பெரும்பான்மையான வாக்குகள் அதிமுக பெரும் என்று கூறினார்.