there is no one to response sasikala at jail

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை கடந்த 14 நாட்களில் 3 பேர் மட்டுமே சந்தித்துள்ளதுள்ளனர். 


சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அதிமுக பிளவுபடுவதற்கு முன்பு சிறையில் இருந்த சசிகலாவை சந்திக்க தினமும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோருவர்.

ஆனால் வெகுசிலருக்கு மட்டுமே சசிகலாவை சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கும். சின்னம்மாவை எப்படியாவது சந்தித்தே ஆகவே வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர் பெங்களுரூவை தங்களது வீடாக மாற்றிய நிகழ்வெல்லாம் உண்டு..

சின்னம்மாவின் கருணைப் பார்வை படாதா? என்று ஏங்கிக் கிடத்த அக்கட்சியினர் தற்போது மருந்துக்கு கூட சசிகலாவைப் பற்றி சிந்திக்க மறுத்து வருகின்றனர். பன்னீர்செல்வத்தின் போர்க்கொடி, இரட்டை இலை லஞ்சப் புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டது என சசிகலாவின் மீதான குட் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் புகைப்படம் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது இதன் வெளிப்பாடே..

சாம்ராஜ்ஜியம் சரிந்து போகிறதே என்ற மீளாத்துயிரில் இருக்கும் சசிகலாவை சிறையில் சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 14 நாட்களில் 3 பேர் மட்டுமே அவரைச் சந்தித்துள்ளனர்.

சசிகலா என்னும் பிரம்மாண்ட கப்பல் தரைதட்டியதால் என்னவோ மாலுமிகள் தலைதெறிக்க ஓடுகின்றனர் போல.......