Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் அமமுகவின் என்னை கொல்ல பார்க்கிறார்கள்.. அலறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

அமைச்சரின் கார் மந்தித்தோப்பு சாலையில் வந்த போது அவரது கார் மீது மர்ம கும்பல் ஒன்று சரவெடியை கொளுத்திப் போட்டது. அந்த பட்டாசு அமைச்சரின் கார் அருகில் விழுந்து சரமாரியாக வெடித்தது. 

There is a conspiracy going on to kill me... Minister Kadampur Raju Complaint
Author
Thoothukudi, First Published Mar 22, 2021, 11:12 AM IST

தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. கோவை தெற்கு, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ள தொகுதி கோவில்பட்டி. அந்த தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் கோவில்பட்டி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

There is a conspiracy going on to kill me... Minister Kadampur Raju Complaint

இந்நிலையில், கோவில்பட்டி ராஜூவ்நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இரு கட்சியினரும் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, அமமுக வேட்பாளர் தினகரன் வருகை தருவதாக தகவல் கிடைத்ததும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். 

அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கார் மந்தித்தோப்பு சாலையில் வந்த போது அவரது கார் மீது மர்ம கும்பல் ஒன்று சரவெடியை கொளுத்திப் போட்டது. அந்த பட்டாசு அமைச்சரின் கார் அருகில் விழுந்து சரமாரியாக வெடித்தது. அமைச்சரின் கார் ஓட்டுநர் சமர்த்தியமாக காரை முன் கூட்டியே நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இருகட்சியினரும் அங்கு திரண்டதால் போலீஸ் குவிக்கப்பட்டது. 

There is a conspiracy going on to kill me... Minister Kadampur Raju Complaint

இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ;- தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது புகார் தெரிவித்துள்ளார். நேற்றிரவு அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். தடுத்து நிறுத்தி என் கார் மீது அமமுகவினர் வெடிகளை எரிந்தனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios