நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் மாற்றம்..! 4 மூத்த அமைச்சர்களின் இலாக்காவும் மாற்றி அறிவிப்பு
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சராக இருந்த பிடிஆரின் பதவி பறிக்கப்பட்டு தக்வல் தொழில்நுடப் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 2 வருடங்கள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார். இதனையடுத்து அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் நீக்கம்
நிதி அமைச்சராக தங்கம் தென்னரசுவும், தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதி மற்றும் சபரீசன் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பேசியாக ஆடியோ வெளியான நிலையில் தற்போது நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி ராஜா..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் ரவி