கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களிடையே அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வீர உரை ஆற்றினார்.
இதையடுத்து தேனி எம்.பி பார்த்திபன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது சசிகலாவுக்கு “வட போச்சே” என்ற கதைதான்.
அதிமுக, சசிகலா, பன்னீர்செல்வம் என இரண்டு அணியாக உடைந்துள்ளது.
யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும் அதிமுகவினரிடையேயும் வெகுவாக எழுத்துள்ளது.
ஆட்சியை பிடிக்க இருவரில் ஒருவர் எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மையான ஆதரவை நிரூபிக்க வேண்டும்.
தற்போது எம்.எல்.ஏக்களின் ஆதரவு தான் இருவருக்கும் முக்கியமாக தேவைப்படுகிறது.
இதில் தன்னிடம் உள்ள எம்.எல்.ஏக்களை விட்டு விடக்கூடாது என நினைத்த சசிகலா அனைவரையும் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கவைத்து தினமும் கவனித்து வருகிறார்.
ஆனால் எம்.எல்.ஏக்களை பார்த்து எம்.பிக்களை கோட்டை விட்டுக்கொண்டு இருக்கிறார் சசிகலா.
யார் போனாலும் பரவா இல்லை. எம்.எல்.ஏக்கள் இருந்தால் போதும், எதையும் சாதிப்பேன் என அவரது உரையிலும் நேரடியாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் அணிக்கு 10 எம்.பிக்களும் 6 எம்.எல்.ஏக்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தற்போது தேனி எம்.பி. பார்த்திபன் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவரோடு சேர்த்து எம்.பிக்கள் தரவரிசையில் பன்னீருக்கான ஆதரவு 11 ஆக உயர்ந்துள்ளது.
