தேனி மக்களவை உறுப்பினரும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய ஓ பி ரவீந்தரநாத் குமார் தன் பெயரை நியுமராலஜி படி மாற்றிக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ பி ரவீந்தரநாத். தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பாக டெல்லிக்கு சென்றிருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர். பாஜக அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒரே ஒரு ஆதரவுக் குரல் இவருடையதுதான்.எப்படியாவது மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்று பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி வருகிறார்.இருந்தபோதிலும் அமைச்சர் பதவி கிடைக்காமல் கானல் நீராகிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கிறார்.

தன்னுடைய தந்தையான ஓ.பன்னீர்செல்வம் என்று அவர் பெயரை மாற்றிய பிறகு தான் அரசியலில் சுக்கிர திசை நின்று விளையாட ஆரம்பித்தது. அதே போல் தன்னுடைய பெயரையும் நீயூமராலாஜி படி மாற்றி அமைத்தால் அரசியலில் அமைச்சர் பதவி முதல் அனைத்து பதவிகளும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இப்படி பெயரை மாற்றியிருக்கிறார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

இந்நிலையில் இவர் தன் பெயரை இப்போது கெசட்டில் ஓ பி ரவீந்தரநாத் என மாற்றிக்கொண்டுள்ளார். அவரது முழுப் பெயர் ரவீந்தரநாத் குமார் ஆகும்.