தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரே உள்ளேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது;- தேனி தொகுதியில் தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒருவாரத்திற்குள் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்றார். பண பலத்துடன் உருவாக்கப்பட்டதே எனது தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி, அதிகாரம் பண பலத்தால் தோற்கடிக்கப்பட்டேன். 

தனக்கு வாக்களித்த தேனி மக்களுக்கும், உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். தன் மகன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வாரணாசி சென்று ஓபிஎஸ் மோடியைச் சந்தித்தார். பல மின்னணு இயந்திரங்களில் சீல் இல்லை. கேமட்டால் அரக்கு கீழே விழுந்துவிட்டதாக கூறினர். தேனி மாவட்டத்தில் விவிபேட் வாக்குகளை முழுமையாக எண்ண வேண்டும்.தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 

ஆனால் வடமாநிலங்களில் அதற்கு கேட்டார்போல் அமையவில்லை. காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களான தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல் பன்னீர்செல்வத்தின் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை என்று கூறினார்.