Asianet News TamilAsianet News Tamil

திரையங்குகள் திறக்க அனுமதியில்லை.. எவை எவைக்கெல்லாம் தடை தொடர்கிறது? முழு விவரம்..!

தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எவை எவைக்குத் தடை என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

Theaters are not allowed to open
Author
Tamil Nadu, First Published Jul 10, 2021, 2:37 PM IST

தமிழகத்தில் ஜூலை 19ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் எவை எவைக்குத் தடை என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மாநிலத்தின்  கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு (புதுச்சேரி நீங்கலாக) தடை தொடரும்.

*  மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

*  திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் திறக்க தடை.

*  பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தத் தடை

*  பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும் தடை நீடிக்கும்.

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்.

*  உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் அனுமதியில்லை.

*  நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதே நிலை தொடர்கிறது.

*  இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

Follow Us:
Download App:
  • android
  • ios