கமல்ஹாசனை காண விரும்பிய மக்கள் சாரல் மழையில் நனைந்த படியே நீண்டநேரம் காத்திருந்த நிலையில், ஏசி காரில் தாமதமாக வந்து தொண்டர் ஒருவர் குடை பிடிக்க 5 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு சென்றது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் திருப்பூர் சிடிசி கார்னர் பகுதியில் பொதுமக்களிடையே பேசுகையில் வரும் தேர்தல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே நடைபெறும் போட்டி. வரும் வழியில் நொய்யல் ஆற்றை பார்த்தேன் நொந்து போனேன். தரமான மருத்துவமனை தேவை. உங்களிடம் பிடித்தம் செய்யப்படும் இ.எஸ்.ஐ பணத்தை முறையாக செலவு செய்திருந்தால் திருப்பூர் வேறு வடிவில் இருந்திருக்கும். 

அந்த வடிவத்தை கொண்டு வரவேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை என்றார்.  முன்னதாக 4 மணிக்கு கமல்ஹாசன் வருவதாக கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் 3.30 மணிக்கே அங்கு கூடத்துவங்கினர். ஆனால் 6 மணிக்கு தான் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு கமல்ஹாசன் வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கமல்ஹாசனை காண விரும்பிய மக்கள் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் நனைந்த படியே நின்றிருந்த நிலையில் ஏசி காரில் தாமதமாக வந்து தொண்டர் ஒருவர் குடை பிடிக்க 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார். 

இடையிடையே குடை பிடித்தவர் கை வலிக்க லேசாக நகர்ந்ததால் குடைய தனக்கு சரியாக பிடிக்குமாறு பேச்சுக்கு இடையே சைகை காட்டியபடி இருந்தார் கமல். மணிக்கணக்கில்  இவர் பேச்சை மறந்து விடக்கூடாது என காரின் உள்ளே அமர்ந்திருந்த. பெண் அவ்வப்போது இவர் பேச வேண்டியதை எழுதி எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார். அதனை பார்த்து பார்த்து பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் அவர். பலமணி நேரம் கமலுக்குக மழையில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் கமல் தான் மழையில் நனைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது, அங்கிருந்தவர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவர் பேசியது அருகில் இருந்தவர்களுக்கு கூட சரியாக கேட்க வில்லை எனவும். சினிமா நடிகரை பார்க்கவே கூட்டம் கூடியதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.