The winner of the criminal case against 143 people in UP MLAs - Fakir information

உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்ற 403 எம்.எல்.ஏ.க்களில், 322 பேர் கோடீஸ்வரர்கள் எனவும், 143 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேர்தலின்போது வேட்புமனுவுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு சரிபார்த்து வருகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 143 எம்.எல்.ஏ.க்களில், 107 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான பயங்கர குற்றங்கள் பதிவாகியுள்ளன.

கிரிமினல் வேட்பாளர்களில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாபியா கும்பல் தலைவர் முக்தார் அன்சாரி முதலிடத்தில் உள்ளார். இவர் மீது 5 கொலை வழக்கு உட்பட 16 கிரிமினல் வழக்குகள் உள்ளன.