The vote should not be held until the re-order comes to 18 seats

முதல்வர் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் செப்டம்பர் 20-ம் தேதி (இன்று) வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் தங்களது தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி துரைசாமி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு விதித்த தடை நீடிக்கும் எனவும் மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இருக்கும் எம்.எல்.ஏக்களை வைத்து பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என நினைத்த முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.