Asianet News TamilAsianet News Tamil

கறுப்பர் கூட்டத்தலைவன் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்... கதறும் கறுப்பு சிவப்பு திமுக கூடாரம்..!

கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் தலைவன், மற்றும் திமுக ஐடி விங்குடன் தொடர்புடைய செந்தில்வாசனை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 
 

The thug law flowed over the Karuppar koottam  leader senthil vasan ... the screaming black red DMK tent
Author
Tamil Nadu, First Published Jul 28, 2020, 11:21 AM IST


கந்த சஷ்டி கவசம் பாடல் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட கறுப்பர் கூட்டம் தலைவன், மற்றும் திமுக ஐடி விங்குடன் தொடர்புடைய செந்தில்வாசனை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. கடவுள்கள் பற்றியும் மோசமான விமர்சனங்கள் அந்த சேனலில் வெளியிடப்பட்டிருந்தன. அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.The thug law flowed over the Karuppar koottam  leader senthil vasan ... the screaming black red DMK tent

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன.  காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கடந்த 16 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

அதன் பின்னர் அவர் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தையும் இந்து கடவுள்களையும் அவதூறாக பேசியவர்களையும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

The thug law flowed over the Karuppar koottam  leader senthil vasan ... the screaming black red DMK tent

இந்த நிலையில் சுரேந்திரன் மீது நேற்று குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சுரேந்திரன். இந்த நிலையில் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகிய இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுககூடாரம் அதிர்ந்து தவிக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios