Asianet News TamilAsianet News Tamil

தமிழக சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றம்.. அதிமுகவை டார் டாராக கிழித்த முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ்.

ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக கூறினார் கருணாஸ் ஆனாலும் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் கருணாஸ் கட்சியை அதிமுக  கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை, அதேநேரத்தில் திமுகவும் கருணாசை கண்டுகொள்ளவில்லை, 

The Tamil Nadu Legislative Assembly is a  vetti mandram. Mukulathor Pulipadai Karunash criticized Admk.
Author
Chennai, First Published Oct 28, 2021, 4:05 PM IST

தமிழக சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றமாக செயல்படுகிறது என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சிறையிலிருந்து வரும்போதே அம்மையார் சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார். திரைத்துறையில் காமெடி நடிகராக வளம் வந்த கருணாஸ் திடீரென சாதி அடையாளத்துடன் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நிறுவி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திருவாடனை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு பெற்றார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை செல்வாக்கு மிகுந்த எம்எல்ஏ என்ற கௌரவத்துடன் வலம்வந்தார் கருணாஸ், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுக  தலைமைகளுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கருணாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். பின்னர் திமுகவுடன் இணைந்து சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென எடப்பாடி பழனிச்சாமியுடன் மீண்டும் நட்பு பாராட்டினார். ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் உரிய மரியாதை இல்லை, தனது தொகுதிக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய கருணாஸ் அம்மா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என புலம்பினார். ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக கூறினார் கருணாஸ், 

இதையும் படியுங்கள் : தமிழகத்தில் பாஜகதான் எதிர் கட்சியா..? அண்ணாமலையை பங்கம் செய்த செல்லூர் ராஜூ.. பயங்கர எச்சரிக்கை.

The Tamil Nadu Legislative Assembly is a  vetti mandram. Mukulathor Pulipadai Karunash criticized Admk.

ஆனாலும் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் கருணாஸ் கட்சியை அதிமுக  கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை, அதேநேரத்தில் திமுகவும் கருணாசை கண்டுகொள்ளவில்லை, பின்னர் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தன் கட்சிக்கு செல்வாக்கு இல்லை, செலவழிப்பதற்கு அந்தளவிற்கு பணமில்லை என கதறிய அவர், மொத்தமாக  தேர்தலை விட்டு விலகினார். இந்நிலையில் மீண்டும் சசிகலா அவர்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள நிலையில் அவரை நேரடியாக சந்தித்து பேசியுள்ளார் கருணாஸ்.சசிகலா தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாகவும் கருணாஸ்  பேசி வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது சகோதரர்களின் 220 ஆவது  குரு பூஜை  முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது கருணாஸ் பேசியதாவது, 

The Tamil Nadu Legislative Assembly is a  vetti mandram. Mukulathor Pulipadai Karunash criticized Admk.

இதையும் படியுங்கள் : அய்யோ.. தமிழக மக்களே உஷார்.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப ரொம்ப அலர்ட்டா இருங்க.

தொடர்ந்து திமுக அரசின் ஆட்சியை உற்று கவனித்து வருகிறேன், பின்னர் அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பினே என்றார். சமூக நீதி கட்சி என தன்னைக் கூறிக்கொள்ளும் திமுக, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முந்தைய அரசு ஒரு சாராருக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது, ஆனால் அதனை அனைத்து சமூகத்திற்கும் வழங்கும்படி செய்து அனைத்து சமூகத்துக்குமான அரசாக திமுக அரசு செயல்பட வேண்டும் என்றார். திமுக பிரச்சாரத்தின் போது ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் பெயர் வைக்கப்படும் என ஸ்டாலின் அவர்கள் கூறினார். அதனை அவர் உடனே செயல்படுத்த வேண்டும் என்றார். 

The Tamil Nadu Legislative Assembly is a  vetti mandram. Mukulathor Pulipadai Karunash criticized Admk.

மேலும், சசிகலா அரசியல் பயணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிறையில் இருந்து விடுதலையான போதே சசிகலா அம்மையார் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். அவர்களைப் பற்றி மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை எனக் கூறினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது திட்டம் எனக்கூறி புராணம் பாடும் வெட்டி மன்றமாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios