The Tamil Nadu government has given 3 suggestions on the increase in traffic wages.

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு 3 யோசனைகளை தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாநிலம் முழுவதும் 1.43 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். 

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன. 

இதுகுறித்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 

இதில் தமிழக அரசு சார்பில் மூன்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 2.57% ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 2.44 ஊதிய உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு நடத்தலாம் 2.37 % ஊதிய உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த மூன்று யோசனைகளில் ஒன்றை முடிவு செய்வது பற்றி தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.