அதனை தொடர்ந்து பேசிய  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி:- சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றதில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் பெருமை வாய்ந்த்தது என்றார்.  

சென்னை உயர்நீதி மன்றம் மிகவும் பெருமை வாய்ந்தது என்றும், அடித்தட்டு மக்களுக்கு நீதி சென்றடைவதை உறுதி செய்வேன் என சென்னை உயர் நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட முனீஸ்வர நாத் பாண்டாரி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது.

அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா சங்க தலைவர் செங்குட்டுவன் அகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.

விழாவில் பேசிய தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிமன்ற அறை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தலைமை நீதிபதிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு 2007ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டதாகவும், 2007ல் குடியரசுத்தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த அப்துல்கலாம் ஆல் தான் நீங்கள் முதல்முறையாக நீதிபதியாக நியமிக்கப்பட்டீர்கள் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி:-

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றதில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் பெருமை வாய்ந்த்தது என்றார். கடந்த 2 மாதங்களாக சக நீதிபதிகள், தமிழகம், மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். அடித்தட்டு மக்களுக்கும் நீதி சென்றடைவதை உறுதி செய்வேன் என்றும், எப்போதும் அணுக்கூடிய வகையில் இருப்பேன் என தெரிவித்தார். நான் மிகவும் நேசிக்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும், இந்த நீதிமன்றத்தை சிறப்பாக வழி நடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தெரிவித்தார்.