Asianet News TamilAsianet News Tamil

அப்படியெல்லாம் செய்ய முடியாதுங்க...! நீதிமன்றத்தில் அடித்து கூறும் தமிழக அரசு...! ஈடு கொடுக்கும் திமுக...!

The speaker can not order the MLAs to disqualify
The speaker can not order the MLAs to disqualify
Author
First Published Jan 17, 2018, 12:03 PM IST


எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். 

அதிமுக இரண்டு அணியாக பிரிந்ததையடுத்து முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். 

ஆனால் எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை எனகூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரிந்து சென்ற ஒபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. 

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஒபிஎஸ் தலைமையிலான  11 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர். 

இதைதொடர்ந்து பெரும்பான்மையின் காரணமாக எடப்பாடி முதலமைச்சராக நீடித்தார். ஆனாலும் தற்போது எடப்பாடிக்கு எதிராக திரும்பிய டிடிவி அணியில் இருந்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இதை செய்த சபாநாயகர் ஒபிஎஸ் எதிர்த்தபோது ஏன் செய்யவில்லை எனவும்  11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடி வருகிறார். 

அப்போது, எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என வாதாடி வருகிறார். 

மேலும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவது குறித்து சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். அந்த உத்தரவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தலாமே தவிர, தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது  வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் அப்போது 11 எம்.எல்.ஏக்களை தகுதி செய்ய மறுத்துவிட்டார் என திமுக வழக்கறிஞர் வாதாடி வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios