Asianet News TamilAsianet News Tamil

தமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்..! புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..!

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி பேசிய போது..,
 

The soil that sowed the seeds for the development of Tamil Eelam ..! Puliyur Man Veeraman. Kolathur bell full of emotion ..!
Author
Tamilnadu, First Published Nov 28, 2020, 9:03 PM IST

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி பேசிய போது..,

The soil that sowed the seeds for the development of Tamil Eelam ..! Puliyur Man Veeraman. Kolathur bell full of emotion ..!

’’1982ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் அன்றுதான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சாந்த முதல் போராளி களப்பலி ஆனார். ஈழத்தில் அவர் மீது தாக்குதல் நடந்திருந்தாலும் தமிழ்நாட்டில் வந்துதான் உயிர்விட்டார். பிரபாகரனின் மடியில் இருந்தவாரு அவர் உயிர் பிரிந்தது. 82ம் ஆண்டு அவரது மறைவு நடந்திருந்தாலும் அதற்கு பின்னாள் களப்போரில் ஏராளமான புலிகள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்த நிகழ்வினை ஒவ்வொரு புலிகளுக்கு தனிப்பட்ட நினைவு நாளாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக உயிரை ஈகம் செய்த அத்தனை போராளிகளுக்குமான நினைவு நாளாகத்தான் நவம்பர் 27ம் நாளில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. பெயர் கூட தெரியாத, அடையாளம் தெரியாது இருக்கின்ற சின்னஞ்சிறு போராளிகளின் 1989ம் ஆண்டில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கம் கடைப்பிடித்து வருகிறது.1989ல் மாவீரர் நாளை அறிவிக்கும் போது நானும் ஈழத்திற்கு சென்று பிரபாகரனுடன் இருந்தேன்.

The soil that sowed the seeds for the development of Tamil Eelam ..! Puliyur Man Veeraman. Kolathur bell full of emotion ..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஈழத்திற்கு வெளியே இருந்த அத்தனை பயிற்சி முகாம்களுக்கும் பொறுப்பு வகித்து வந்த, புலிகள் இயக்கத்தின் தொடக்ககால போராளியுமான பொன்னம்மான் 1990ல் மறைந்த பிறகு, அவருக்காக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்று கருதியிருந்தேன். அதனால்தான் இந்த நினைவு கூடத்தை அமைத்தேன். அதை அப்போது நாடாளுமன்ற உறூப்பினராக இருந்த வைகோ திறந்து வைத்தார்.அதிலிருந்து மாவீரர் நாளை ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் அனுசரித்து வருகிறோம்.

தொடர்ந்து நடந்த ஆயுதப்போராட்டம் 2009ம் ஆண்டு மே மாதத்தோடு புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு, பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.இந்த புலியூர் மண்ணில்தான் 1984ம் ஆண்டு தொடங்கி 1986ம் ஆண்டு வரை ஆயிரம் புலிகளுக்கு மேலாக இங்கு ஆயுத பயிற்சி எடுத்திருக்கிறார்கள். ஈழத்திற்கு சென்று போராட்டத்தில் தங்களை இழந்திருக்கிறார்கள்.

புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அனைவரும் இங்கிருந்து பயிற்சி பெற்று சென்றவர்கள்தான். புலேந்திரன் அவர்கள் இங்கு பயிற்சி முகாமில் பயற்சியாளராக இருந்தார். பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இறுதி வரை இருந்த சொர்ணமும், ஆதவன், செங்கமலம் , புலிகள் இயக்கத்தின் சர்வதேச அரசியல் பொறுப்பாளராக முதன் முதலில் நியமிக்கப்பட்ட ராம் திலகர், உட்பட பலரும் இங்கிருந்து பயிற்சி பெற்று சென்றவர்கள்தான்.

இயக்கத்திற்கு எதிராக துரோகியாகிப்போன கருணாவும் இங்கு பயிற்சி எடுத்தவர்தான். இந்திய அரசின் அமைதிப்படையோடு இணங்கி போய் துரோகம் செய்ய முற்பட்ட மாத்தையாவும் இங்கு பயிற்சி எடுத்தவர்தான். வேறு படுத்தி காட்டுவதற்காகத்தான் உயிரை ஈகம் செய்தவர்களோடு இப்படிப்பட்ட துரோகிகளையும் பற்றி பேச வேண்டியதாக இருக்கிறது’’ என்றவர்  மேலும் தொடர்ந்தார்.., ‘’ஒரு லட்சியத்தில் தொடர்ந்து பங்கெடுக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால், துரோகிகளாக ஆகிப்போவதுதான் வேதனை அளிக்கிறது.

The soil that sowed the seeds for the development of Tamil Eelam ..! Puliyur Man Veeraman. Kolathur bell full of emotion ..!

நாங்கள் ஆயுத வழியில் செல்கிறோம். நீங்கள் அரசியல் வழியில் சென்று மக்களுக்காக விடுதலையை பெற்றுக்கொடுங்கள் என்று பிரபாகரன் முன்நின்றததால் தான் ஈழத்தில் பலரும் அரசியலில் வெற்றி பெற்றார்கள். ஆனால், அவர்கள் தமிழக அரசியல் வாதிகளை விட மோசமாகிவிட்டார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பாக புலிகள் உருவாக்கிய பின்னர்தான் நின்ற அத்தனை பேரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்கள் . தொடர்ச்சியாக அவர்கள் அரசியல் பணி ஆற்றுவதற்கு புலிகள் ஆதரவாக இருந்தார்கள்.அவர்களின் மிகச்சிலரை தவிர மற்றவர்கள் நடந்துகொண்டு வரும் முறையை பார்க்கிறோம். எல்லோரும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தோற்கடிக்கிற அளவுக்கு துரோகிகளாகவும், கொள்கையற்றவர்களாகவும் மாறிவிட்டார்கள்’’.

Follow Us:
Download App:
  • android
  • ios