Asianet News TamilAsianet News Tamil

அரிவாள் வெட்டில் தனியாக கழன்ற ராம கோபாலனின் மண்டை ஓடு... பாட்சாவிடமிருந்து காப்பாற்றிய கோக்... திரில் சம்பவம்!

நடுத்தர வயது மனிதர் ராம கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்ட  அதனை புகுந்து தடுத்து அந்த நடுத்தர வயது மனிதனை மடக்கி பிடித்தார் ஒருவர்... அவர் தான் அண்ணன் கோக்.

The skull of Rama Gopalan who was left alone in the scythe cut ... Coke saved from Padhsha
Author
Tamil Nadu, First Published Oct 1, 2020, 1:48 PM IST

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனின் காவி தலைப்பாகை ரகசியம் பற்றி தனது முகநூல் பக்கத்தில் ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பதிவில், ‘’அந்த 80 காலகட்டத்தில் எல்லாம் மதுரையில் செல்வாக்கு இல்லாதவர்கள் பணிந்து தான் போக வேண்டும். தன்மானம் உள்ளவர்களுக்கு கட்டாயம் பக்க பலம் வேண்டும். அப்போது நான் 8ம் வகுப்பு ரயில்வே மிக்சட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். மதுரை ரயில்நிலைய போர்ட்டர்கள் சங்க தலைவர் கோக் மற்றும் எதிர்க்கும் எவனையும் பார்த்த மாத்திரத்தில் தாக்கிவிடும் புத்துகால் ரவி ஆகியோர் எனக்கு நட்பாகி போனார்கள். ( நட்பாக்கி கொண்டேன்) பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் உள்ள யூனியன் அலுவலகம் அருகே அமர்ந்து கொண்டிருப்பார்கள். அது தான் அவர்களுக்கு வீடு வாசல் எல்லாமே.The skull of Rama Gopalan who was left alone in the scythe cut ... Coke saved from Padhsha

கோக் அண்ணன தெரியும்னு சொன்னாலே தெரிச்சு ஒடுவனுக. மிக பெரிய ஆள் என்றாலும்,நேர்மையான மரியாதையான மனிதன் கோக். நான் என் வாழ் நாளில் சந்தித்ததிலேயோ இன்று வரை அவரை போன்ற உண்மையான வீரனை பார்த்ததில்லை. எப்போதும் கஞ்சா புகைத்துக்கொண்டு பேரானந்தமாய் அமைதியாய் அமர்ந்திருப்பார். இன்று வரை... மதிக்காத எவனையும் நாளையை பற்றி கவலை இல்லாமல், போடா என எதிர்க்க தயாராகவும்... எதையும் தூக்கி எறிய எனக்கு வழிகாட்டியாக இருக்கும் ஆசான் கோக்.

இப்ப ராமகோபாலன் விசயத்துக்கு வருவோம்.. 80கள் மீனாட்சிபுரத்தில் பலர் கொத்துகொததாக மதம் மாற்றம் செய்யப்பட அந்த கால கட்டத்தில் முளைத்தவர் தான் ராம கோபாலன். மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை போட்டு மிகக்கடுமையாக இஸ்லாமிய மதத்தையும் திராவிட இயக்கங்களையும் கடமையாக தாக்குவது தான் ராமகோபாலன் அவர்களின் முழு நேர பணியாகிப்போனது. மதமாற்றம் ஒரு புறம் நடந்தது உண்மை என்றாலும்,கடுமையான இஸ்லாமிய மதத்திற்கு எதிரான அவரது பேச்சுக்கள் பல இஸ்லாமிய இளைஞர்களை ஆத்திரமடைய செய்தது.

The skull of Rama Gopalan who was left alone in the scythe cut ... Coke saved from Padhsha

ராமகோபாலனை தீர்த்து கட்ட சில மதவாதிகள் திட்டம் தீட்டினர். அதில் பிரதானமானவர் தற்போது கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பாட்சா. இரவு 11 மணி... அனல் பறந்த கோவை பொதுக்கூட்டம்.. அந்த மதத்தை எவ்வளவு விமர்சிக்க முடியுமோ அவ்வளவு விமர்சித்தார் ராம கோபாலன். இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏரியது. இப்போதே முடித்து விட வேண்டும் ராமகோபாலனை என்ற வெறி.

பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு கோவை ராமேஸ்வரம் ரயிலில் மதுரைக்கு புறப்பட்டார் ராம கோபாலன். அந்த ரயில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் மதுரை வந்து சேரும்முதல் ரயில். மதுரை வந்து இறங்கினார் ராம கோபாலன்.. ரயில் நிலைய படிக்கட்டில் ஏறி நடந்தார். வேகமாக பின் தொடர்ந்து வந்த ஒரு நடுத்தர வயது மனிதர் ராம கோபாலனை அரிவாளால் சரமாரியாக வெட்ட  அதனை புகுந்து தடுத்து அந்த நடுத்தர வயது மனிதனை மடக்கி பிடித்தார் ஒருவர்... அவர் தான் அண்ணன் கோக்.The skull of Rama Gopalan who was left alone in the scythe cut ... Coke saved from Padhsha

உடனடியாக மடக்கி அந்த மர்ம மனிதனை போலீசில் ஒப்படைத்தார் கோக்... அந்த மர்ம மனிதன் தான் கோவை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் பாட்சா. அதே நேரம் யார் என்றே தெரியாத ராம கோபாலனை உடனடியாக ரிக்சாவில் மருத்துவமனைக்கு அனுப்பியவரும் கோக் மற்றும் அங்கிருந்த ரயில்வே போர்ட்டர்கள் தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராம கோபாலனுன்கு மண்டை ஓட்டில் விழுந்த வெட்டில் மண்டை ஒடு தனியாக கழன்று விட்டது.

பின்னர் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்டீலினால் செய்யப்பட்ட மூடி தான் அவரது மூளையை இன்று வரை மூடி வந்தது. அவரது தலை உச்சியில் ஒரு விரலை வைத்து அழுத்தினாலே அவர் உயிர் பிரிந்து விடும். அப்படிபட்ட நிலையில் கிட்டதட்ட நாற்பது வருடங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார் ராம கோபாலன். அதனால் தான் அவர் காவி தலைப்பாகையை தலையில் கட்டுவதை வழக்கமாக கொண்டார்.The skull of Rama Gopalan who was left alone in the scythe cut ... Coke saved from Padhsha

பாட்சா முதன் முறையாக போலீசில் பிடி பட்டதும் இந்த சம்பவத்தால்  தான். இது மட்டுமில்ல கோக் அண்ணனுக்கு பல வீர கதைங்க இருக்கு.. அப்புறம் விவரம் தொரிஞ்ச காலத்துல தான் புரிஞ்சுக்கிட்டேன் கோக் அண்ணே யாருன்னு. ஆனா விவரம் புரியாத காலத்திலேயே ஏதோ என் மனசுக்கு ஹீரோவா தொரிஞ்சாரு கோக் அண்ணே. ஆனா கடைசி வரைக்கும் பாட்சா யாரு ராமகோபாலன் யாருன்னே தெரியாது கோக் அண்ணனுக்கு.

இதுல இன்னொரு தத்துவமும் இருக்கு தன் உயிர கப்பாதுன கோக்குக்கு எந்த நன்றி கடனும் ராம கோபாலன் செய்யவும் இல்ல... அதே நேரம் தன்னை மடக்கி பிடித்து கொலை திட்டத்த நிறைவேறாமல் பண்ணின கோக்க பலி வாங்கனும்னு பாட்சாவும் நெனைக்கல’’என அதிர்ச்சி விலகாமல் விவரித்திருக்கிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios