குஷ்புவுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்... தடயமில்லாமல் எல்லாம் போச்சு..!
பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு ட்விட்டர் வலைதளத்தில் கரசாரமான அரசிய்ல் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
நடிகையும், பாஜக நிர்வாகியான குஷ்பு சுந்தர் @khushsundar டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு ட்விட்டர் வலைதளத்தில் கரசாரமான அரசிய்ல் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அவை பல சமயங்களில் பேசுபொருளாக, விவாதகளமாக அமைந்துள்ளது. இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டு, அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. குஷ்புவை ட்விட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் தொடர்ந்து வந்தனர். அவர் 710 பேரை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த குஷ்பு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும் தனக்கு பாஜகவில் ஏதாவது பொறுப்பு கிடைக்கும் என நம்பி இருந்தார். கிடைக்காததால் அவர் விரக்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில், ’’குஷ்பு அக்காவே ஸ்கெட்ச் போட்டு பண்ணிருக்கலாம். பாஜக எதிர்ப்பு ட்வீட் நோண்டி எடுத்து கலாய்க்கிறாங்கன்னு ஹேக் பண்ற மாறி எல்லா டீவீட்டும் டெலிட் பண்ணிருக்கலாம்’’ என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த அண்டு (2020) ஏப்ரல் 7ந்தேதியும் குஷ்புவின் டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது.