Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை அடித்து நொறுக்கும் இரண்டாவது அலை.. ஒரே நாளில் 56,211 பேருக்கு வைரஸ் தொற்று.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95, 855 ஆக உயர்ந்துள்ளது. 

The second wave to hit India .. 56,211 people infected with the virus in a single day.
Author
Chennai, First Published Mar 30, 2021, 11:55 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சுமார் 56 ஆயிரத்து  211 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கபளீகரம் செய்துள்ளது. ஆனால் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கடந்த சில மாதங்களாக கொரோனா படிப்படியாக குறைந்து கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது அதன் இரண்டாவது அலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. 

The second wave to hit India .. 56,211 people infected with the virus in a single day.

இதனால் இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மகாராஷ்டிராவில் அதன் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல பெங்களூரிவிலும்  கொரோனா வைரஸ் வேகமாக தாக்கி வருகிறது. மீண்டும் ஊரடங்கு விரும்பவில்லை என்றால், மக்கள் மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.  சென்னையிலும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

The second wave to hit India .. 56,211 people infected with the virus in a single day.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95, 855 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில்  புதிதாக 56, 211 பேர் வைரஸ்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 271 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டின் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 114 உயர்ந்துள்ளது. இதுவரையில் நாடுமுழுவதும் 1,13,93,021  பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,40,720  பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மறுபுறம் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி வெள்ளிக்கிழமை காலை வரை மொத்தம் 6,11,13,354 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios