கருணாநிதிக்கு பிறகு பகுத்தறிவு பேசுவதிலும் நையாண்டி செய்வதிலும் கெட்டிக்காரராக திகழ்பவர் திமுக பொருளாளர் துரைமுருகன். அவரது செல்வாக்கை பயன்படுத்தி வேலூர் மக்களவை எம்.பி.,யாக தனது மகன் கதிர் ஆனந்தை எம்.பியாக்கி அழகு பார்த்து வருகிறார்.  நாத்திகம் பேசும் அப்பாவுக்கு உள்ளுக்குள் கடவுள் பக்தி அதிகம் இருந்தாலும் மகன் அதனை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டு வருகிறார் கதிர் ஆனந்த். 

வேலூரில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற போது கட்சியின் கொள்கையை மறந்து காஞ்சிபுரத்தில் அத்திவரதரை ஓடோடிப்போய் தரிசனம் செய்தார் கதிர் ஆனந்த்.  அதே போல் அவர் தனது குடும்பத்தினருடன் அர்ச்சகரை வைத்து பூஜை செய்யும் படங்கள் வெளியாகி உள்ளன. தனது மனைவி, குழந்தைகளுடன் கதிர் ஆனந்த் பூஜை செய்யும் இந்த புகைப்படங்களை பாஜக ஐடி விங் சமூகவலைதளங்களில் வெளியிட்டு விமர்சனம் செய்து வருகிறது.