Asianet News TamilAsianet News Tamil

இந்த சிக்கல்களுக்கு காரணம் ஆளுநர் தான்.. அவருக்கு கடிவாளம் போட ஐடியா கொடுக்கும் ராமதாஸ்!

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய  6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

The reason for these problems is the governor... Ramadoss!
Author
First Published Nov 11, 2022, 3:28 PM IST

நளினி உள்பட 6 பேர் விடுதலை உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த பிறகும் சிறை தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய  6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இதையும் படிக்க:- பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

The reason for these problems is the governor... Ramadoss!

6 தமிழர்களின் நன்நடத்தை, கல்வித் தகுதி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.

The reason for these problems is the governor... Ramadoss!

6 தமிழர்களின் விடுதலைக்கு 09.09.2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தான் அடிப்படை.  அமைச்சரவை தீர்மானத்தை அப்போதே ஆளுனர் ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே அவர்கள் விடுதலையாகியிருப்பார்கள். இப்போது  4 ஆண்டுகள் தாமதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The reason for these problems is the governor... Ramadoss!

அமைச்சரவையின் முடிவுகள் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்படாதது தான் பல சிக்கல்களுக்கு காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுனர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:-  தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு..! ராமதாஸ் அறிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios