பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணிக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பாமக கெளரவ தலைவருமான ஜி.கே.மணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பாமக கெளரவ தலைவருமான ஜி.கே.மணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாமகவின் முக்கிய பிரமுகரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான பாமக கெளரவ தலைவருமான ஜி.கே.மணிக்கு அவ்வப்போது செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜி.கே.மணி கறி விருந்து சாப்பிட்டிருக்கிறார். அதன் பின்னர் செரிமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சேலத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்திருந்ததாக கூறப்படுகிறது.