தமிழகத்தில் பல கட்டங்களாக பல்வேறு வகையான தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. திரையரங்குகள் மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட சில இடங்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பதில் அளித்துள்ளது. அதில், “பொதுமுடக்கம் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மெரினாவில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் திறப்பு நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது