நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுபவர்கள் யார்.? விண்ணப்ப விநியோகம் பணி இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் இன்று திமுக தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்படும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற மார்ச் 7ஆம் தேதிக்குள் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The process of distribution of preference petitions for the candidates contesting on behalf of DMK in the parliamentary elections begins today KAK

சூடு பிடிக்கும் தேர்தல் பணி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் மத்தியில் வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. அந்தவகையில், நாடு முழுவதும் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதே போல காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இறங்கவுள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான திமுக தனது தேர்தல் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்ட  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.

The process of distribution of preference petitions for the candidates contesting on behalf of DMK in the parliamentary elections begins today KAK

விருப்ப மனு இன்று முதல் விநியோகம்

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுபவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி   நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று ( 19-2-2024) முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, 1-3-2024 முதல் 7-3-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

The process of distribution of preference petitions for the candidates contesting on behalf of DMK in the parliamentary elections begins today KAK

விருப்ப மனு கட்டணம் எவ்வளவு.?

மேலும் வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம்  50,000/- எனவும், விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் விண்ணப்ப விநியோகிக்கும் பணி தொடங்கவிருப்பதால் ஏராளமானோர் ஆர்வத்தோடு விருப்ப மனுவை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புறீங்களா.? துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios