தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனாலும், ’எல்லா சிக்கல்களும் அவர்களால் ஏற்பட்டவையே’ என்கிறார்கள் கல்வி ஆர்வலர்கள்.

 

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்த 22-ம் தேதி முதல் 9 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதுகள், தற்காலிக பணிநீக்கம் அடுத்தடுத்த நடவடிக்கைகளாலும், அரசின் வேண்டுகோளை ஏற்றும் அனைவரும் பணிக்கும் திரும்பினர்.

இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத்துறையில் இருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்ப பெறப்பட்டது.பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட சம்பள பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத சம்பளத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மாதந்தோறும் கட்சி தேதியில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த டிசம்பர் 31ம் தேதிய சம்பளம் வழங்கப்படவில்லை. திருத்தப்பட்ட சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் வருகிற 4-ந்தேதி வழங்கப்பட உள்ளது. அதேபோல் தேர்வு நெருங்கி வருவதால் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுகட்ட சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் என்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.