தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை என எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளதற்கு மத்திய அரசின் கண்காணிப்பு அழுத்தமே காரணம் என தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு செல்கிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 543 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை  நீட்டித்துள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்படும். இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அமுல்படுத்தப்போவதில்லை என பஞ்சாப், கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என இரு மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

அதேவேளை, கேரளாவில் உணவகங்கள் முழுமையாக இயங்குவதற்கும், மாநிலத்திற்குள் பேருந்துகள் இயங்கவும் இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து ஊரடங்கை சரியாக பின்பற்றாத மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூடி ஊரடங்கு வீதிமிறல் நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இது சம்பந்தமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அம்மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. 

அதே போல் மத்திய அரசின் குழு கண்காணிக்க இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. அங்கும் ஊரடங்கு மீறல் நடைபெறுகிறதா ? என்பதை கண்காணிக்க மத்திய அரசு குழுவை அனுப்பியுள்ளது.

அதற்கு அடித்தபடுயாக ராஜஸ்தானின் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா அதிகரித்து வரக்கூடிய சூழலில் இங்கு ஊரடங்கு உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் குழு சென்றுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து அதன் அடிப்படையில் அந்த மாநில அரசுகள் மீதான நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவரும்.

அதே போல மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலத்தில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அமைச்சரவை இல்லை முதல்வர் மட்டுமே இருக்கிறார். இதனால், ஊரடங்கு குறித்து அறிவிப்பு முழுமையாக கடிபிடிக்கப்படுகின்றதா என்று ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

இந்தக்கூட்டத்தின் முடிவில் நோய்த்தொற்று குறைந்தால் வல்லுனர் குழுவின் ஆலோசனையை பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவு எடுக்கப்படும். 3ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் மத்திய அரசின் கண்காணிப்பு அழுத்தமே ஊரடங்கில் முடிவெடுக்க முடியாமல் எடப்பாடி பின் வாங்கியதாக கூறப்படுகிறது.