Asianet News TamilAsianet News Tamil

ஜனாதிபதி உரை வெற்று முழக்கம் மட்டுமே..!!இந்தியாவின் எதிர்காலம் இருண்டுள்ளது..!! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!!

நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதுவும் அதில் சொல்லப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் மட்டுமே அதில் இருந்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மேக்ரோ-பொருளாதார நிலை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. வேலையிழப்பு, வேலையின்மை அதிகரிப்பு, நுகர்வோர் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டது ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை

The President's speech is just plain slogan .. !! The future of India is bleak .. !! P Chidambaram indictment ... !!
Author
India, First Published Jan 31, 2020, 9:34 PM IST


ஜனாதிபதி உரை வெற்று முழக்கம் மட்டுமே..!!இந்தியாவின் எதிர்காலம் இருண்டுள்ளது..!!
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!! 

இன்று இந்திய அரசின் பாராளுமன்றம் கூட்டத்தொடர் ஆரம்பமானது.அதில் ஜனாதிபதி முதல் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் மத்திய அரசின் இந்திய குடியுரிமை சட்டம்,காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது எல்லாம் நாட்டின் நலனுக்கானது என்று பேசினார். இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசுத் தலைவர் இந்தாண்டின் அரசாங்கத்தின் முதல் கொள்கை அறிக்கை பற்றி உரையாற்றினார். அதில் கடுமையான பொருளாதார சரிவை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்துத் தேடினேன்.

 

 நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதுவும் அதில் சொல்லப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் மட்டுமே அதில் இருந்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மேக்ரோ-பொருளாதார நிலை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
 வேலையிழப்பு, வேலையின்மை அதிகரிப்பு, நுகர்வோர் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டது ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

 குடியரசுத் தலைவரின் உரையில் முதலீடு குறைந்து வருவது மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றுமில்லை. இதனால் உற்பத்தித் துறையின் எதிர்காலம் இருண்டுள்ளது.

The President's speech is just plain slogan .. !! The future of India is bleak .. !! P Chidambaram indictment ... !!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான அறிக்கையில் கடந்த 6 மாதங்களில் அது ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 75 லட்சம் மக்கள் மீது அநீதியைக் குவிப்பதில் அரசு உறுதியாக இருப்பதையும் காட்டுகிறது.

The President's speech is just plain slogan .. !! The future of India is bleak .. !! P Chidambaram indictment ... !!

அதேபோல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நடத்திய போராட்டங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான தனது கடினமான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் நிராகரிப்பது போராட்டங்களை தீவிரப்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

Follow Us:
Download App:
  • android
  • ios