Asianet News TamilAsianet News Tamil

கோழியை திருடிச் சென்ற போலீசார்... உரிமையாளரை நெஞ்சில் எட்டி மிதித்து அராஜாகம்..!

கோழியை திருடி சென்றவர் காவலர் பால்கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர் மீது புகார் கொடுத்தோம். 

The police who stole the chicken ... trampled the owner in the chest and caused anarchy ..!
Author
Tamil Nadu, First Published Aug 21, 2021, 12:09 PM IST

கோழி கடைக்குள் புகுந்து கோழியை திருடியது மட்டுமல்லாமல் கடை உரிமையாளரை தாக்கிய 3 காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வன். இவர் கடல் குடியில்கறிக்கடை நடத்தி வருகிறார்.The police who stole the chicken ... trampled the owner in the chest and caused anarchy ..!

இந்நிலையில் , முத்துசெல்வனுக்கு தெரியாமல் நள்ளிரவில் கோழிக்கடைக்கு சென்று கோழிகளை பிடித்து சென்றுள்ளனர். இந்த தகவல் பரவிய நிலையில் காவலர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கோழிக்கடை உரிமியாளரான முத்துசெல்வனை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையை சேர்ந்த மூன்றுபேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.The police who stole the chicken ... trampled the owner in the chest and caused anarchy ..!

இதுகுறித்து முத்து கிருஷ்ணன் மனைவி கூறுகையில், ‘’கோழியை திருடி சென்றவர் காவலர் பால்கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர் மீது புகார் கொடுத்தோம். இதனையடுத்து அவர் மூன்று காவலர்களுடன் வந்து எனது கணவரை நெஞ்சில் மிதித்து அடித்து உதைத்தனர். எங்களது கடையில் திருடி சென்ற காவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால் எங்களையே வந்து அடிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.?  பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இப்படி நடந்து கொள்ளலாமா..? என வேதனை தெரிவிக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios