Asianet News TamilAsianet News Tamil

தேமுதிக-பாமக உறவு? கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்.. ஜி.கே மணி அதிரடி.

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் தி.நகரில் உள்ள அக்கட்சியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. 

The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.
Author
Chennai, First Published Feb 23, 2021, 1:07 PM IST

கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் விருப்பமனு விநியோகம் தி.நகரில் உள்ள அக்கட்சியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது விருப்ப மனுக்களைபெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி கூறுகையில்,  "2021 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து தொகுதிளுக்கும் விருப்பமனு பெறப்படுகிறது.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து விரைவில் ராமதாஸ் அறிவிப்பார், 

The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.

என்றும் வன்னியர் சமூக மக்களுக்கான தலைவர் ராமதாஸ் தான். வன்னியருக்கு மட்டுமின்றி அருந்ததியருக்கும் இட ஒதுக்கீடு கோரியவர் ராமதாஸ்தான், அதேபோல் ST மக்களுக்கு மருத்துவ படிப்பில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு ராமதாஸின் முயற்சியால், அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின் போது வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ராமதாஸ் வலியுறுத்திய மாவட்டங்களை பிரித்தல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு போன்ற பலவற்றை அதிமுக கூட்டணி நிறைவேற்றியுள்ளது. நிறைவேற்றாதவை குறித்து ராமதாஸ் அறிக்கைகளின் வாயிலாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.தேர்தலுக்காக மட்டுமின்றி எல்லா காலங்களிலும் பாமக மதுவிலக்கை வலியுறுத்தியுள்ளது. 

The PMK-DMDK relationship? Ramadas will announce the alliance and block allocation soon .. GK Mani Action.

தமிழக வரலாற்றில் 2-வது விவசாய கடன் முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு, குடிமரமாத்து பணிகள் மேற்கொண்டது என முதல்வரின் பணி வரவேற்கதக்கது என்றார். தேமுதிகவுக்கும்-பாமகவுக்குமான உறவு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிந கேள்விக்கு பதிலளித்த அவர், பாமகவுடன் நெருக்கமாக உள்ளோம் என தேமுதிகவின் எல்.கே.சுதிஷே தெரிவித்துள்ளார்' , என மணி பதிலளித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios