முழுமையடைந்த  அண்ணா சதுக்கம்"... நான்கு மூலையில் -  நான்கு  முதல்வர்கள்..! 

இன்னும் சற்று நேரத்தில், ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்ட கலைஞரின் இறுதி பயண ஊர்வலம் மெரினாவை அடைய உள்ளது.
 ராஜாஜி ஹால் முதல் மெரினா வரை வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருகின்றனர்.

அண்ணா சமாதிக்கு பின்புறமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை அண்ணா சதுக்கம் என்று கூறுவார்கள்...

இந்த நான்கு மூலையிலும் தமிழ் நாட்டை ஆண்ட நான்கு முதல்வர்கள் இடம் பெற்று உள்ளனர்.அண்ணா சதுக்கம் என்ற பெயருக்கு ஏற்ப, தற்போது சதுக்கத்தின் நான்கு மூலையும் நிரம்பி விட்டது.