தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

 

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசையும் ஒட்டு பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்,  அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிக  பட்சமாக ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) வீரகனூர் (சேலம்) தென்காசி செங்கோட்டை (தென்காசி) தலா நான்கு சென்டிமீட்டர் மழையும் இரணியல் (கன்னியாகுமரி) வைப்பார் (தூத்துக்குடி) காரியாபட்டி (விருதுநகர்) திருப்பூண்டி (நாகப்பட்டினம்) கூடலூர் (தேனி) திண்டுக்கல் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.