பாஜக டெல்லி தலைமையை கையில் போட்டுக் கோண்டதால் அதிமுக கூட்டணியில் ஒரு சீட்டை பெற்ரு விட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கிருஷ்ணசாமிக்கு தென்காசி தனி தொகுதியை ஒதுக்கியது அதுமுக. அவரை இரட்டை இலை சின்னத்தில் நிற்கக் கேட்டுக் கொண்டது அதிமுக. ஆனால் நின்றால் தனிச் சின்னத்தில் தான் நிற்பேன் என அடம்பிடித்தார் கிருஷ்ணசாமி. ஆரம்பத்தில் அவரது போக்குக்கே விட்டு விட்டது அதிமுக. ஆனால் தேர்தல் செலவுக்கு பத்து பைசாவைக்கூட தன் பாக்கெட்டில் இருந்து செலவு செய்ய மாட்டேன் என ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தார். 

இந்த நிலையில் தேர்தல் செலவுக்கு அதிமுகவினரிடமும், பாஜக தலைவர்களிடமும் சீட் கொடுத்தீர்கள். ஆனால் போஸ்டர் ஒட்ட பசை வாங்க, செலவுகளுக்கு பணம் வேண்டும் என நச்சரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. பாஜக தலைவர்கள் அதிமுக நிர்வாகிகளை அணுகச் சொல்லி இருக்கிறார்கள். அதிமுக நிர்வாகிகளோ எங்களது கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால் பணம் தருகிறோம். 

தனி சின்னத்தில் போட்டியிட்டால் எங்களால் செலவுக்கு பணம் தர முடியாது எனக் கறாராக கூறியிருக்கின்றனர். கூட்டணி என்றால் எங்கள் கட்சியினர் ஓட்டுதான் போடுவார்கள். பணம் தர முடியாது எனச் சொல்ல பதறியடித்த கிருஷ்ணசாமி, அதன் பிறகே இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடிவு செய்தாராம். அதிமுகவும் பணத்தை கொடுத்து சீட் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டது.