இடைத்தேர்தல் நடக்கும் இடத்தில் மட்டும் வாக்களர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கவும், இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறது அமமுக.

 

அதற்காக அதிமுகவை வீழ்த்தும் தொகுதிகளில் எது? எந்த இடத்தில் நாம் பலமாக இருக்கிறோம்? உண்மையான விசுவாசி யார் என லிஸ்ட் எடுத்து வருகிறார்கள். அதனால் வெற்றி வாய்ப்புள்ள இடத்தில் தனக்கு விசுவாசமான வேட்பாளர்களுக்கு மட்டும் ஒடு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க அமமுக திட்டமிட்டுள்ளது. 39 மக்களவை தொகுதிகள் இப்போது தங்களுக்கு முக்கியமில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து விட்டால் ஆட்சி களைந்து விடும். ஆட்சி முடிவுக்கு வந்தால் கட்சி தன் வசமாகி விடும் என டி.டி.வி.தினகரன் கணக்குபோட்டுள்ளார்.

ஆகையால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் தென்மாவட்டங்களில் இருக்கும் சில தொகுதிகளில் எப்படியும் இடைத்தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என களப்பணியை முடுக்கி விட்டுள்ளாரார் டி.டி.வி. ஆனால், எடப்பாடி பழனிசாமி வேறு ரூட்டில் பயணித்து டி.டி.வி.தினகரனின் திட்டத்தை முறியடிக்க திட்டமிட்டுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில் 9 தொகுதிகள் வடமாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளது.

தென்மாவட்டங்களை விட அதிமுகவுக்கு குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்தப் பகுதியில் ஆதரவு அதிகம். ஆகவே இந்த 9 தொகுதிகளில் வெற்றிபெற கோடிக்கணக்கில் பணத்தை இறக்கவுள்ளது. அதிகாரம் கைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்து வெற்றிபெற பாருங்கள். இல்லையேல் நமது அரசியலுக்கு முடிவு கட்டி விடுவார்கள். எல்லாம் நம் கையை விட்டு போய்விடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம்.