கோவையிலுள்ள கட்சி நிர்வாகிகளிடம் பேசி நாளைக்கு ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 30 பேரையாவது என் வீட்டு முன்னாடி கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
கே.சி.பி நிறுவனத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகவும் கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணனின் வீட்டை புனரமைத்ததும் அம்பலமாகி உள்ளது. பல லட்ச ரூபாய் செலவில் புனரமைத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய நெருக்கமானவர்களின் இடங்கள் என 55 இடங்களில் நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டது. சோதனையின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரெய்டு வரும் தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட வேலுமணி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் பரவி வருகிறது.
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் கொறடாவான வேலுமணி சென்னையில் தங்கி இருந்தார். வேலுமணியின் சகோதரருக்கு சொந்தமான சொகுசு வீடு சென்னையில் உள்ள எம்ஆர்சி நகரில் உள்ளது. இந்த வீட்டில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இரவு வேலுமணி தங்கியிருந்தார். அன்று இரவு அவருக்கு போன் மூலம் ரெய்டு தொடர்பாக சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தார் எஸ் பி வேலுமணி.
மேலும் சட்டமன்றம் நடக்கப் போகும் போது எப்படி ரெய்டு நடத்துவார்கள் அதுவும் 50க்கும் மேற்பட்ட இடங்களிலா என்று அதிர்ச்சியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தன் மீது ரைடு பாயும் என்பது ஏற்கனவே வேலுமணிக்கு தெரியும். ஆனால் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த போகும் ரகசிய தகவல் கிடைத்தவுடன் வேலுமணி கோவைக்கும், சென்னையில் உள்ள பலருக்கும் அடுத்தடுத்து போன் கால்கள் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.

கோவையிலுள்ள கட்சி நிர்வாகிகளிடம் பேசி நாளைக்கு ஒவ்வொரு நிர்வாகியும் குறைந்தது 30 பேரையாவது என் வீட்டு முன்னாடி கொண்டு வந்து நிறுத்த வேண்டும். ரெய்டு தொடங்கிய உடனே குறைந்தது ஆயிரம் பேராவது எனக்கு ஆதரவாக என் வீட்டு முன்னாடி இருக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர் திட்டமிட்டபடியே காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தொடங்கிய உடன் உடனடியாக கோவையில் உள்ள வேலுமணியின் வீடு முன்பாக ஏராளமான கட்சிக்காரர்கள் குவிய ஆரம்பித்தனர். அடுத்து விசாரணை முடிந்ததுமே, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தான் வேலுமணி சென்றார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரிடமும் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். போன் செய்து பேசினாராம். வேலுமணி மீதான கைது நடவடிக்கையை கைவிடும்படி கோரிக்கை வைக்கவும் தான், விஜிலென்ஸ் டி.எஸ்.பி. கந்தசாமி கோட்டைக்கு விரைந்து, முதல்வருடன் ஆலோசனையும் நடத்தினாராம்.

அதாவது வேலுமணியின் கைது நடவடிக்கையை இல்லாமல் செய்ததே ஓ.பி.எஸ். தான் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஓ.பி.எஸ். பேசியதால், வேலுமணி கைது இல்லாமல் போனதா? அல்லது சரியான கணக்கு விவரங்களை சமர்ப்பித்ததால் கைது இல்லாமல் போனதா? என்பது தெரியவில்லை.
