The official announcement will be made by the candidate who will be the candidate during the session
ஆட்சி மன்ற கூட்டத்தின் போது வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ராயப்பேட்டை அலுவலகம் செல்லாமல் இருப்பதற்கு காரணம் பயந்து கொண்டு அல்ல, பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கி செல்கிறோம் எனவும் டிடிவி ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னமும் கட்சியின் பெயரும் எடப்பாடி ஒபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி அணியின் பக்கமே இருப்பதாலும் அதிக எம்.எல்.ஏக்கள் அவர்கள் பக்கம் இருப்பதாலும் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் விசுவாசி தங்க தமிழ்செல்வன், ஒபிஎஸ் இபிஎஸ் இணைப்பு டைவர்ஸில் தான் முடியும் எனவும் மனங்கள் இணையாமல் சேர்ந்து என்னப்பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி மன்ற கூட்டத்தின் போது வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ராயப்பேட்டை அலுவலகம் செல்லாமல் இருப்பதற்கு காரணம் பயந்து கொண்டு அல்ல, பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கி செல்கிறோம் எனவும் தெரிவித்தார்.
அதிமுகவின் கொடியையே நாங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம் எனவும் அதற்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஓட்டுக்கு பணம்லாம் நாங்க கொடுக்கமாட்டோம் எனவும் ஆளும் சர்க்கார் தான் பணம் கொடுப்பார்கள் எனவும் புகார் கூறினார்.
