Asianet News TamilAsianet News Tamil

இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை குறைந்தது.. சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்.

இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும், இதனால், முன்கள பணியாளர்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


 

The number of people who have been vaccinated for the second time is low .. Health Secretary shock information.
Author
Chennai, First Published Aug 4, 2021, 1:57 PM IST

இரண்டாம் தவனை கொரோனா தடுப்பூசி போட்ட முன்கள பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதாகவும், இதனால், முன்கள பணியாளர்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுநீரக சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

The number of people who have been vaccinated for the second time is low .. Health Secretary shock information.

தமிழகத்தில் தற்போது  13 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாகவும் தெரிவித்தார். அன்மையில் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வருவதாகவும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறினார். முன்கள பணியாளர்கள் 80 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 40 சதவிகிதற்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்தவர்,  இரண்டாம் தவனை போடாதவர்கள் முன்வந்து தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தினார். The number of people who have been vaccinated for the second time is low .. Health Secretary shock information.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தினர் சில மருந்துகள் தரம் குறைந்து இருப்பதாகவும் அதனை  திருப்பி அனுப்புமாறு மாவட்டங்களுக்கு அறிவிப்பு  விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இது வழக்கமான நடைமுறை தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 
96 தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக புகார் வந்துள்ளதாகவும், 
மக்கள் சிகிச்சைக்கு செல்லும் பொழுது கூடுதல் கட்டணம் வசூலிக்க முற்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios