Asianet News TamilAsianet News Tamil

இதற்கு பெயர் நேர்மை.. தந்திரம் கிடையாது.. நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பழனிவேல் தியாகராஜன்!

பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளதற்கு பெயர் நேர்மை. தந்திரம் அல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
 

The name for this is honesty .. there is no trick .. Palanivel Thiagarajan who retaliated against Nirmala Sitharaman!
Author
Chennai, First Published Aug 17, 2021, 9:40 PM IST

திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசின் இந்த விலை குறைப்பு பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. வரி லிட்டருக்கு ரூ.7 உயர்த்தப்பட்டு, இப்போது ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அது மாநில அரசுகளின் முடிவு” எனத் தெரிவித்திருந்தார்.The name for this is honesty .. there is no trick .. Palanivel Thiagarajan who retaliated against Nirmala Sitharaman!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், “2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு இரு கட்டங்களாக 7 ரூபாயை உயர்த்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக எதிர்த்து வாதம் செய்தது. தற்போது திமுக அரசு அமைந்துள்ளது.  பெட்ரோல் மீதான மாநில வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். இதற்கு பெயர் நேர்மை. தந்திரம் அல்ல” என பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios